News October 14, 2025
தூத்துக்குடியில் 47 கிலோ புகையிலை பறிமுதல்

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டபத்திற்கு உட்பட்ட சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி அருகாமையில் உள்ள தனிநபரின் வீட்டில் நேற்று (13.10.2025, திங்கட்கிழமை) தடை விதிக்கப்பட்ட புகையிலை 47 கிலோ பதுக்கிவைத்திருந்ததாக தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்களால் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து மத்திய பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவை மத்திய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Similar News
News October 14, 2025
தூத்துக்குடி: ரயில்வேயில் சூப்பர் வேலை.! மிஸ் பண்ணாதீங்க

இந்தியா ரயில்வேயில் 368 Section Controller காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை.
2. சம்பளம்: ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 20-33 (SC/ST-38, OBC-36)
5.கடைசி தேதி: 14.10.2025 (இன்றே கடைசி)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7.இந்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 14, 2025
தூத்துக்குடி: சொத்து வரிக்கு 5% தள்ளுபடி! உடனே முந்துங்கள்…

சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2025 முதல் 26ஆம் வருடத்திற்கான வரியினை 1.10.2025 முதல் செலுத்தும் சொத்து உரிமையாளருக்கு சொத்து வரியை ஐந்து சதவீதம் (அ) அதிகபட்சமாக 5,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் 31.10.2025க்குள் வரியினை செலுத்திடுமாறு தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சார்பாக நேற்று (அக். 13) திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 14, 2025
கோவில்பட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இம்மாதம் 24ஆம் தேதி கோவில்பட்டி வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் தூத்துக்குடி வரும் அவர் அங்கிருந்து கோவில்பட்டி செல்கிறார். கோவில்பட்டியில், புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக நகர அலுவலகம், மேலும், அங்கு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையையும் முதலமைச்சர் திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.