News June 24, 2024

தூத்துக்குடியில் 37 கடைகளுக்கு சீல்

image

மே மற்றும் ஜூன் மாதங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்த 37 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 21 கடைகளுக்கு ரூ.6,85,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காவல் துறையும், உணவு பாதுகாப்புத் துறையும் இணைந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Similar News

News September 4, 2025

தூத்துக்குடி: மின் வாரியத்தில் 1,794 காலியிடங்கள்! உடனே APPLY

image

தூத்துக்குடி மக்களே, தமிழ்நாடு மின் வாரியத்தில் 1,794 கள உதவியாளர் காலிபணியிடங்களை<> TNPSC அறிவித்துள்ளது<<>>. 18 முதல் 32 வயதுக்கு உட்பட்ட ஐடிஐ முடித்தவர்கள் www.tnpsc.gov.inஇல் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.18,800-ரூ.59,900. கடைசி தேதி: 02-10-2025 ஆகும். மின்சாரத்துறையில் அதிக காலியிடங்கள். நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News September 4, 2025

தூத்துக்குடி அரசு வேலை.. ரூ.58,100 சம்பளம்! கலெக்டர் அறிவிப்பு!

image

தூத்துக்குடியில் ஸ்ரீவை., ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் இரவு காவலர் காலிபணியிடங்களை <>மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்<<>>. 18 முதல் 37 வயதுக்கு உட்பட்ட எழுத படிக்கச் தெரிந்தவர்கள் www.tnrd.tn.gov.in என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். ரூ.15,700 முதல் ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். செப். 30 கடைசி தேதியாகும். சொந்த ஊரில் அரசு வேலை! மிஸ் பண்ணாதீங்க. SHARE பண்ணுங்க!

News September 4, 2025

தூத்துக்குடிகல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்

image

யுஜிசி மானிய குழுவின் வரைவு அறிக்கையானது கல்வியை காவிமயம் ஆக்குவதோடு, அறிவியலுக்கு புறம்பான ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை கல்வியில் திணிக்க முயல்வதாகவும், அதனைக் கண்டித்தும், LOCF அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தியும் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி வாசல் அருகே இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் ராம்குமார் தலைமையில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். 

error: Content is protected !!