News September 30, 2024

தூத்துக்குடியில் 24 வாகனங்கள் பறிமுதல்

image

தூத்துக்குடியில் அனைத்து இடங்களிலும் போலீசார் வாகன தணிக்கை மற்றும் ரோந்து பணி மேற்கொண்டு போக்குவரத்து விதிகளை மீறுவோர் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார். இந்நிலையில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டிய நபர்கள் மீது நேற்று (செப்.29) 82 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Similar News

News November 20, 2024

மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் தேர்வு!

image

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையிலான மகளிர் கிரிக்கெட் போட்டி 2025 ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இதற்காக, தூத்துக்குடி மாவட்ட மகளிர் கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு வரும் 24ஆம் தேதி காலை தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள சான் கிரிக்கெட் அகடாமியில் நடைபெற உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

News November 20, 2024

தூத்துக்குடி, திருச்செந்தூர் DSP-க்கள் மாற்றம்

image

திருச்சுழி DSP-ஆக இருந்த ஜெயநாதன் கோவில்பட்டி DSP-க்கு மாற்றப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் வள்ளியூர் DSP யோகேஷ் குமார் திருச்செந்தூர் DSP-ஆக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்செந்தூர் DSP வசந்த ராஜ் கொங்கு நகர காவல் உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி குற்ற ஆவண காப்பக DSP பொன்ராமு விருதுநகர் மாவட்டம் திருச்சுழிக்கு மாற்றப்பட்டுள்ளார். கோவில்பட்டி DSP வெங்கடேஷ் வள்ளியூருக்கு மாற்றம்.

News November 20, 2024

இலங்கைக்கு கடத்தவிருந்த பீடி இலைகள் பறிமுதல்!

image

தூத்துக்குடி கியூ பிராஞ்ச் போலீசார் இன்று(நவ.,20) அதிகாலை குலசேகரப்பட்டினம் வடக்கூர் கடற்கரையில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை மறித்து சோதனை செய்ததில், இலங்கைக்கு கடத்துவதற்காக 44 பண்டல்களில் 1500 கிலோ பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வேன் டிரைவரானை திருச்சியை சேர்ந்த பிரகாஷையும் கைது செய்தனர்.