News January 28, 2026

தூத்துக்குடியில் ரூ.900 கோடி வர்த்தகம் பாதிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மாவட்டத்தில் பல்வேறு வங்கிகள் தொடர்ந்து மூடப்பட்டதால் பயனாளர்கள் மிகவும் அவதி அடையடைந்தனர். இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் ரூ.900 கோடி பணபரிவர்த்தனை நடைபெறும் நிலையில் நேற்று இவை முழுமையாக பாதிக்கப்பட்டது.

Similar News

News January 28, 2026

தூத்துக்குடி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

தூத்துக்குடி மக்களே கோடைகாலம் வெகு விரைவில் தொடங்க உள்ளது. திடீரென மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால், வெக்கையில் வாடுவதை தவிர்க்க அப்போது லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனி நீங்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், சில நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 28, 2026

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை உயர்வு!

image

நிலக்கடலை விலை உயர்வைத் தொடர்ந்து கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நல சங்கம் மிட்டாய் விலையை 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதுவரை கிலோ ரூ.200 முதல் ரூ.260 வரை விற்பனையான நிலையில், இப்போது ரூ.260-க்கு விற்கப்படுகிறது. இன்று முதல் புதிய விலை அமலுக்கு வந்தது. விலை உயர்வால் பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்க

News January 28, 2026

கோவில்பட்டி உயரும் கடலை மிட்டாய் விலை

image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புவிசார் குறியீடு பெற்ற கடலை மிட்டாய் தயாரிப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்நிலையில் கடலை பருப்புகள் விளைச்சல் குறைந்ததாலும், விலை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்ந்ததால் உற்பத்தியாளர்கள் கடலை மிட்டாய் விலையை 40% வரை உயர்த்துவதாக கோவில்பட்டியில் இன்று (ஜன.28) நடைபெற்ற சங்க கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!