News August 5, 2024
தூத்துக்குடியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே செம்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து மதன் (37) என்பவர், இன்று மதியம் அப்பகுதியில் உள்ள அவரது வயலில் இருந்த மாடுகளை விரட்டிய போது இடியுடன் கூடிய கன மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 27, 2026
தூத்துக்குடி: இனி கம்மி விலையில் புது பைக், கார், டிராக்டர்

தூத்துக்குடி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. <
News January 27, 2026
தூத்துக்குடி: பேருந்து மோதியதில் ஒருவர் பலி

குரும்பூர் அருகே அழகப்பபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (49). திருச்செந்தூரில் ஹோட்டலில் வேலை பார்த்து வந்த இவர் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது குரும்பூர் மெயின் பஜாரில் சாலையை கடக்க முயன்ற போது திருச்செந்தூரில் இருந்து நெல்லை சென்ற தனியார் பஸ் இவர் மீது மோதியதில் பலத்த காயனடைந்த நிலையில் உயிரிழந்தார். இது குறித்து குரும்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News January 26, 2026
தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


