News December 16, 2025

தூத்துக்குடியில் மின்கம்பியாள் உதவியாளர் தேர்வு

image

தூத்துக்குடியில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு (Wireman Helper Competency Examination) 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மேலும் விண்ணப்பத்தாரர்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 7, 2026

தூத்துக்குடி: வதந்திகளை நம்ப வேண்டாம் – ஆட்சியர்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு என தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இது உண்மை அல்ல. போதிய சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளன. எனவே பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுள்ளார்.

News April 6, 2026

BREAKING தூத்துக்குடி: 9 போலீசாருக்கு தூக்கு தண்டனை

image

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து இன்று 9 போலீசாருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

News April 6, 2026

சாத்தான்குளம்: மரண தண்டனை விதிப்பதே சிறந்தது – நீதிபது

image

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு அரிதினும் அரிதான வழக்கு. ஒரே நேரத்தில் தந்தை – மகன் இன்று ஒரு குரும்பத்தின் ஆணி வேர் பிடுங்கப்பட்டுள்ளது. இதில் மரண தண்டனை தர வேண்டுமே என்பதை ஆலோசிக்க வேண்டியுள்ளது. இது போன்ற வழக்குகளில் ஆயும் தண்டனை கொடுத்தால் காவல் துறையினருக்கு அச்சத்தை ஏற்படுத்தாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!