News July 6, 2025

தூத்துக்குடியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் ஜூலை 19ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அன்று, காலை 8.30 – 3 மணி வரை St. மரியன்னை கல்லூரியில் நடைபெறு கிறது. 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இம்முகாமில் பங்குபெற உள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர் இந்த <>லிங்கில் <<>>பதிவு செய்து கொள்ளவும். இதனை தெரியாதோர் தெரிந்துகொள்ள பலருக்கும் SHARE செய்யவும்.

Similar News

News July 6, 2025

திருச்செந்தூர் முருக பக்தர்களே இச்செய்தி உங்களுக்குத்தான்…

image

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை (ஜூலை 7) காலை 6:15 – 6:50 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அந்த புனித நீர் ட்ரோன் மூலம் பக்தர்கள் மீது தெளிக்கப்படும். அதன்பிறகு 8000 ச.அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட யாகசாலையில் 400 கும்பங்களுடன் பூஜைகள் நடைபெறுகிறது. 37 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலின் மேற்கு வாசல் திறக்கப்படும். 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. முருக பக்தர்களுக்கு SHARE செய்யவும்.

News July 6, 2025

தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் இயந்திரக் கோளாறு

image

சென்னை-தூத்துக்குடிக்கு இன்று காலை 10:10 மணிக்கு 65 பயணிகள் உட்பட 70 பேருடன் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், ஓடுபாதையில் செல்லும்போது திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டு, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானியின் உரிய நடவடிக்கையால் விபத்து தவிர்க்கப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாக இருந்தனர். கோளாறு சரிசெய்யப்பட்டு, விமானம் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 6, 2025

குடமுழுக்கு 40 எல்இடி, 40,000 அடி பிரம்மாண்ட மேடை

image

திருச்செந்தூர் கும்பாபிஷேத்தை முன்னிட்டு 40 எல்இடி டிவி மற்றும் 40 ஆயிரம் சதுர அடி பிரம்மாண்ட மேடை கோவில் நிர்வாகத்தால் அமைக்கபட்டு வருகிறது. அந்த பிரம்மாண்ட மேடையில் பக்தர்கள் நின்று கும்பாபிஷேகத்தை கண்டு களிக்க கோவில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யபட்டு வருகிறது. மேலும் பலர் இந்த கோவில் கும்பாபிஷேத்தில் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் 40 எல்.இ.டி டிவி கோவில் சார்பில் வைக்கபட்டுள்ளது .

error: Content is protected !!