News April 8, 2025
தூத்துக்குடியில் மனதை மயக்கும் மயில் தோட்டம் தெரியுமா?

ஓட்டப்பிடாரம் அருகே கேரளாவைச் சேர்ந்தவர் 1980 ஆண்டு, 58 ஏக்கரில் தோட்டம் ஒன்றை அமைத்து, மா, தென்னை, கொய்யா என பல மரங்களை நட்டார். சில ஆண்டுகளில் இந்த தோட்டத்திற்கு ஒரு சில மைல்கள் வர ஆரம்பித்தன. இப்போது இத்தோட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட மையில்கள் உள்ளன. பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் இந்த தோட்டம், மயில்களுக்கான தோட்டம் என்று அழைக்கப்படுகிறது. இதை அனைவரும் கண்டு மகிழ SHARE பண்ணுங்க
Similar News
News December 16, 2025
பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு பாஜக கண்டனம்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஒரு கல்குவாரியில் வேலை தேடி வந்த அசாம் மாநில பெண் கூட்டு பாலியல் செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு ஆகிவிட்டது என்பதை மீண்டும் ஒருமுறை இச்சம்பவம் நிரூபித்துள்ளது. காட்டுமிராண்டித்தனமான இச்செயலுக்கு வெட்கி தலை குனிய வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கன் தெரிவித்துள்ளார்.
News December 16, 2025
தூத்துக்குடி: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா? APPLY NOW

தூத்துக்குடி மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <
News December 16, 2025
தூத்துக்குடியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தூத்துக்குடி மாநகராட்சியில் டிசம்பர் 17 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வல்லநாடு, கலியாவூர், கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மின்தடை ஏற்படும். இதனால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா கூறியுள்ளார்.


