News April 29, 2025

தூத்துக்குடியில் மகளிர் கிரிக்கெட் அணித் தேர்வு

image

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான 12 வயதிற்கு மேற்பட்டோருக்கான மகளிர் கிரிக்கெட் போட்டிக்கான தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் அணித் தேர்வு (மே1) வியாழன் அன்று தூத்துக்குடி JMJ கிரிக்கெட் பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 8015621154, 8754004377 மற்றும் 9944833333 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News April 30, 2025

ஊர்க்காவல் படை தளபதிக்கு எஸ்பி பாராட்டு

image

டெல்லி ஊர்க்காவல் படை உள்துறை அமைச்சகம் சிறப்பாக பணியாற்றிய ஊர்க்காவல் படையினருக்கு விருதுகள் வழங்குகிறது. அந்த வகையில் தூத்துக்குடி ஊர்காவல் படையில் 20 ஆண்டுக்காலம் சிறப்பாக பணியாற்றிய ஊர்க்காவல் படை தளபதி உலகம்மாளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது. இதனையடுத்து, அவரை நேற்று கோரம்பள்ளத்தில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

News April 30, 2025

நாளை காவல்துறை சார்பில் குறை தீர்ப்பு கூட்டம்

image

கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து வாரம் தோறும் புதன்கிழமை மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில் நாளை (ஏப்ரல் 30) குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் மனுக்கள் மற்றும் ஏனைய மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.

News April 30, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஏப்.29) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 0461-2340393 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 9514144100 எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!