News April 6, 2025

தூத்துக்குடியில் ‘புத்தொழில் களம்’ சிறப்பு நிகழ்ச்சி

image

தூத்துக்குடி மாவட்டத்தின் கட்டமைப்பை முன்னேற்றும் விதமாகவும், மேம்படுத்துவதன் வழியாகவும், இந்தியாவின் முதல் மாவட்டமாக மாற்றும் விதமாக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் ‘புத்தொழில் களம்’ என்ற நிகழ்ச்சி (ஏப் 6) இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News November 9, 2025

தூத்துக்குடி மாநகராட்சி கடும் எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை வாகனங்கள் மூலம் நாள்தோறும் 180 டன் குப்பைகள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு கையாளப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குப்பை கொட்டப்படுகிறது. எனவே இவ்வாறு மழைநீர் வடிகாலிகளில் குப்பை கொட்டும் பொது மக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

News November 9, 2025

தூத்துக்குடி: நுகர்வோருக்கு ரூ.50,000 இழப்பீடு; நீதிமன்றம் அதிரடி

image

தூத்துக்குடி மாவட்டம் குரங்கணி சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்தார். கடன் தொகை முழுவதும் செலுத்திய பின்னும் மூன்று மாதம் கூடுதலாக தவணைத் தொகை பிடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக முத்துக்குமார் தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் மனு அளித்தார். இதில் நிதி நிறுவனம் முத்துக்குமாருக்கு ரூபாய் 50000 வழங்க உத்தரவிடப்பட்டது.

News November 8, 2025

தூத்துக்குடி: காவல்துறை தேர்வுக்கு எஸ்பி அறிவுரை

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளைய தினம் காவல் மற்றும் தீயணைப்பு படையினருக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க உள்ள விண்ணப்பதாரர்கள் நாளைய தினம் கருப்பு நிற பால் பாயிண்ட் பேனாவை பயன்படுத்த வேண்டும். மேலும் ஆதார் அட்டை உள்ளிட்ட ஏதேனும் அரசு அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். காலை 9:30 மணிக்கு முன்பு வரவேண்டும் என எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!