News December 13, 2024
தூத்துக்குடியில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.14) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். SHARE பண்ணுங்க மக்களே
Similar News
News August 31, 2025
ஆன்லைன் வேலை வாய்ப்பு மோசடி – தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்களில் வரும் போலியான வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி சந்தேகமான இணைப்புகளை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சந்தேகப்படும் சூழ்நிலைகளில் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News August 31, 2025
அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஜமுனாராணி தலைமை வகித்து மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் உட்பட பல்வேறு தரப்பினார்கள் கலந்து கொண்டனர். இதில் 121 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
News August 31, 2025
தூத்துக்குடி சுங்க சாவடியில் சுங்க கட்டணம் உயர்வு

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் இன்று(ஆக.31) நள்ளிரவு முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கார்கள் செல்வதற்கு ஒரு முறை கட்டணமாக ரூ.90 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.5 உயர்ந்து ரூ.95 என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வு செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலாகிறது என கூறப்படுகிறது.