News March 22, 2024

தூத்துக்குடியில் தொடரும் மழை

image

தமிழகத்தில் இன்று (மார்ச்.22) காலை 10 மணி வரை தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் இன்று அதிகாலை 4 மணி முதல் மழை பெய்து வருகிறது. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொரடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 5, 2025

திருச்செந்தூரில் ஓராண்டுக்கு பின் தங்கத்தேர் பவனி

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த வருடம் கும்பாபிஷேக பராமரிப்பு பணிகளுக்காக தங்க தேர் இழுப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை கோவிலில் ஒரு ஆண்டுக்கு பின்னர் தங்கத்தேர் இழுக்கும் பணி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

News September 5, 2025

தூத்துக்குடியில் இரவு ரோந்து அதிகாரிகள் நியமனம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (04.09.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர நிலை ஏற்படும் போது, பொதுமக்கள் அவர்களை நேரடியாக தொடர்புகொள்ளலாம். கூடுதலாக, 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட “ஹலோ போலீஸ்” 95141 44100 என்ற எண்களில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

News September 4, 2025

தூத்துக்குடி துறைமுக பார்வைக்கு அனுமதி இல்லை

image

தூத்துக்குடி துறைமுகத்தை ஒவ்வொரு வருடமும் வ.உ. சிதம்பரனார் பிறந்த நாளன்று (செப். 5) பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதி வழங்கப்படும். ஆனால், 2025ம் ஆண்டு, செப்டம்பர் 5 அன்று இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த ஆண்டு துறைமுகத்திற்கு செல்ல முடியாது. பாதுகாப்பு காரணங்கள் அல்லது நேரடி அதிகாரிகள் அறிவுறுத்தல்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!