News December 20, 2025
தூத்துக்குடியில் தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு மொத்தம் 5,146 பேர் நாளை (டிச.21) தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் காலை 8 – 9.30 மணி, பிற்பகல் 2 – 3 மணிக்கு உள்ளாக மட்டுமே அனுமதிக்கப்படுவர். கருப்பு பேனா, ஹால் டிக்கெட், ஏதேனும் அரசு அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். செல்போன் போன்ற எலக்ட்ரிக் சாதனத்திற்க்கு அனுமதியில்லை போன்ற கட்டுப்பாடுகளை காவல்துறை வெளியிட்டுள்ளது.
Similar News
News December 20, 2025
தூத்துக்குடி: வாக்காளர்கள் நீக்கம் விவரம் தெரிந்துகொள்ள CLICK!

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தொடர்ந்து நேற்று (டிச 19) வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 14,90,685 வாக்காளர்கள் இருந்த நிலையில் SIR க்கு பின்னர் வாக்காளர்களின் எண்ணிக்கை 13,28,158 ஆக உள்ளது. இதில் 1,62, 527 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நீக்கம் செய்யப்பட்டவர் குறித்து அறிய <
News December 20, 2025
தூத்துக்குடி: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

தூத்துக்குடி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் <
News December 20, 2025
தூத்துக்குடி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் – புன்செய், கிராம நத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர், ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக அந்த இடத்திற்கு பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் VAO-விடம் இதற்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்புத் திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். எனவே இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!


