News August 16, 2025
தூத்துக்குடியில் சுதந்திர விநாயகர் கோவில்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள போரூரில் உள்ளது தேசிய சுதந்திர செந்தி விநாயகர் கோவில். இந்த ஊரைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி செந்தில் பெருமாள் விநாயக பக்தர் ஆவார். தேசபக்தர் ஆன இவர் அங்கு 1948 ஆம் ஆண்டு இந்த விநாயகர் கோவிலை கட்டினார். தற்பொழுது அவரது வாரிசுகள் இந்த கோவிலை பராமரித்து வருகின்றன. சுதந்திர தினம் குடியரசு தினம் போன்ற நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
Similar News
News August 16, 2025
தூத்துக்குடி: SC & ST இளைஞர்களுக்கு குட் நியூஸ்

தூத்துக்குடி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இளைஞர்களுக்கு 3 மாத இலவச வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழும், வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வழங்கப்படும். 18-30 வயதுடைய இளைஞர்கள் www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். *இதை ஷேர் செய்து உதவுங்கள்*
News August 16, 2025
தூத்துக்குடி இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News August 15, 2025
55 ஆண்டுகள்.. மரணத்திலும் இணைபிரியா தூத்துக்குடி தம்பதி

சாத்தான்குளம் அருகே உள்ள போலையாபுரத்தை சேர்ந்தவர் பச்சைப்பூதர்மராஜ் (83) இவரது மனைவி தங்க புஷ்பம் (73). திருமணம் ஆகி 55 ஆண்டுகள் ஆகின்றன. தங்க புஷ்பம் இன்று காலை உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவர் இறந்த சில மணி நேரங்களில் உடல்நலக்குறைவு காரணமாக பச்சைப்பூதர்மராஜ் இறந்தார். கணவன் மனைவி ஒரே நாளில் இறந்தது அனைவரையும் மீள துயரத்தில் ஆழ்தியுள்ளது.