News August 8, 2025

தூத்துக்குடியில் சிவன் மீது சூரிய ஒளி விழும் அதிசய கோவில்

image

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ளது திருமூலநாதர் கோவில் எனப்படும் சிவன் கோவில். 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் இக்கோவில் நவலிங்கபுர சிவ ஆலயங்களில் முதலாவது ஆலயமாக போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் மார்ச் மாதம் 21, 22, 23 ஆகிய தேதிகளில் மூலவர் மீது சூரிய ஒளி படும் வகையில் கட்டப்பட்டுள்ளது பெரும் அதிசயமாகும். மனநலம் இதய நோய் உள்ளவர்கள் இங்கு வழிபட்டால் பினி தீரும் என்பது ஐதீகம்.

Similar News

News August 8, 2025

தூத்துக்குடி: FIRST TIME வேலைக்கு போறீங்களா 15,000 CONFIRM!

image

தூத்துக்குடி இளைஞர்களே EPFO-வின் ஊழியர் வைப்பு நிதி சார்ந்த காப்பீடு (ELI) திட்டத்தின் கீழ், ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கபடுகிறது. முதல்முறையாக EPFOவில் பதிவுசெய்து, மாதத்திற்கு 1 லட்சத்திற்குள் சம்பாதிக்கும் புதிய ஊழியர்களுக்கு ரூ.15000 வழங்கப்படும். இரண்டு தவணைகளாக வழங்கபடுகிறது. மேலும் தகவல்களுக்கு தூத்துக்குடியில் உள்ள EPFO அலுவலகத்தை அனுகுங்க. இந்த தகவலை உடனே SHARE பண்ணுங்க!

News August 8, 2025

தூத்துக்குடி: இந்த தேதியை NOTE பண்ணிக்கோங்க!

image

தூத்துக்குடியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் போல, அவ்வப்போது மினி வேலைவாய்ப்பு முகாம்களும் நடைபெற்று வருகிறது. வரும் ஆக. 14ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10க்கு முகாம் தொடங்க உள்ளது. சுமார் 150 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. <>இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். தொடர்பு – 9677734590. வேலை தேடும் இளைஞர்களுக்கு இந்த பயனுள்ள தகவலை உடனே SHARE பண்ணுங்க.

News August 8, 2025

தூத்துக்குடி: ரேஷன் கார்டு வைத்திருப்போரின் கவனத்திற்கு….

image

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 2025 மாதத்திற்கான சிறப்பு முகாம் நாளை (ஆகஸ்ட்-9) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும். இம்முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் உள்ளிட்ட குறைகளை பொதுமக்கள் சரிசெய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!