News August 7, 2025
தூத்துக்குடியில் சிறுபான்மையினர் நலக்கூட்டம் அறிவிப்பு

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் சொ.ஜோ.அருண் ஆகஸ்ட் 20ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிறார். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் காலை 10.30 மணிக்கு சிறுபான்மையினர் பிரதிநிதிகளை சந்தித்து அரசு வழங்கும் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளார். இந்நிகழ்வில் பொதுமக்கள் கலந்துகொள்ள குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News August 8, 2025
விநாயகர் சதுர்த்தி விழா.. தூத்துக்குடி ஆட்சியர் கட்டுப்பாடு!

விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கொண்டாட மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார். களிமண் போன்ற இயற்கை சிலைகள் மட்டுமே நீர் நிலைகளில் கரைக்க அனுமதி உள்ளது. பிளாஸ்டிக், தெர்மாகோல், நச்சு சாயங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. வைக்கோல் பொருட்கள் மட்டுமே அலங்காரத்திற்கு பயன்படுத்த வேண்டும். குறிப்பிடப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் கரைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
News August 7, 2025
தூத்துக்குடி இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று (ஆக. 7) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News August 7, 2025
தூத்துக்குடி: EXAM இல்லாமல் GOVT வேலை.. APPLY பண்ணுங்க!

தமிழக அரசின் TN Rights திட்டத்தில் பணிபுரிய 25 காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் வேலையில் சேர விண்ணப்பிக்கலாம். 20,000 முதல் 1.25 லட்சம் வரை சம்பளம் . இத்திட்ட பணிகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 13ம் தேதி வரை பெறப்படுகிறது. <