News March 15, 2025

தூத்துக்குடியில் சின்ன ரோமாபுரி எங்கிருக்கிறது தெரியுமா?

image

நீலக்கடல் அலைகள் அதன் அருகே நீண்ட அழகிய கடற்கரை, ஆங்காங்கே அதிசய வைக்கும் மணல் குன்றுகள், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம், போர்ச்சுகீசிய மாடலில் தேவாலயங்கள், பிரமாண்ட பழமை மாறாத வீடுகள் உள்ள ஒரு கடற்கரை கிராமம் தான் மணப்பாடு. இயற்கை எழில் கொஞ்சும் இந்த கிராமத்துக்கு சென்றால் ஒரு சிலிர்ப்பு ஏற்படும். அதனால் தான் இதை சின்ன ரோமாபுரி என்கிறார்கள்.*நண்பர்களுக்கு பகிருங்கள் மக்கா*

Similar News

News August 24, 2025

தூத்துக்குடி எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் தந்த கலெக்டர்

image

தூத்துக்குடியில் 6-ம் ஆண்டு புத்தகத்தில் விழா கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அந்த அரங்கத்தில் தனியாக ஒரு அரங்கு ஏற்பாடு செய்து அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எழுத்தாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

News August 23, 2025

தூத்துக்குடி: கை ரேகை வேலை செய்யலையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கே க்ளிக் செய்து<<>> Grievance Redressal, தூத்துக்குடி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க..!

News August 23, 2025

கிணற்றில் மிதந்த சடலம் யார் என கண்டுபிடிப்பதில் தொய்வு

image

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே முள்ளன்விளை கிராமத்தின் காட்டு பகுதியில் கிணற்றில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த உடல் யாருடையது? என்பதை கண்டறிவதில் தொடர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் திணறி வருகின்றனர்.

error: Content is protected !!