News March 23, 2025
தூத்துக்குடியில் கணிணி பட்டா வழங்கும் நிகழ்வு

தூத்துக்குடி எம்எல்ஏ அலுவலகத்தில் வைத்து கடந்த மாதம் கணினி பட்டா இல்லாதவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு முதல் தவணையாக 150 பேருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக 131 பேருக்கு கணினி பட்டா வழங்கும் நிகழ்ச்சி எம்எல்ஏ அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பட்டாக்களை பயனாளிகளிடம் வழங்கினார்.
Similar News
News August 23, 2025
தூத்துக்குடி: 10th போதும்! ரூ.71,000 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். <
News August 23, 2025
தூத்துக்குடி: நாய்கள் தொல்லையா.! உடனே அழையுங்கள்..

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாணவர்கள் இதனால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தெருநாய்கள் தொடர்பான புகார்களுக்கு 18002030401 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க*
News August 23, 2025
திருச்செந்தூரில் ரூ.4.07 கோடி வசூல்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த பணியில் சுமார் ரூ.4.07 கோடி பணம், 1.05 கிலோ தங்கம், 18 கிலோ வெள்ளி, 17 கிலோ பித்தளை, 1218 அயல்நாட்டு நோட்டுகள் என உண்டியல் மூலம் காணிக்கையாக கிடைக்கப்பெற்றது என கோவில் அறங்காவலர் அருள்முருகன் தெரிவித்துள்ளார்.