News August 31, 2024

தூத்துக்குடியில் இறந்தவருக்கு ரூ.37 லட்சம் இழப்பீடு

image

தூத்துக்குடி டாக் தொழிற்சாலையில் நேற்று அம்மோனியா கசிவு ஏற்பட்டதில் ஹரிகரன் என்பவர் உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு நஷ்ட ஈடு கேட்டு உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனை அடுத்து இறந்தவர் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நஷ்ட ஈடும் ரூபாய் 10 லட்சம் காப்பீட்டுத் தொகையும் அடக்க செலவு ரூபாய் 2 லட்சம் என மொத்தமா ரூ.37,00000 ஆலை நிர்வாகம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News September 14, 2025

தூத்துக்குடி: காவலரின் கணவரிடம் அரிவாளில் வெட்டி வழிப்பறி

image

தூத்துக்குடி, எட்டயபுரத்தை சேர்ந்த ஜேசுராஜ் (47) என்பவர் மனைவி தமிழ்ச்செல்வி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக உள்ளார். இவரது கணவன் ஜேசுராஜ் நேற்று முன்தினம் இரவு எட்டயபுரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் வெட்டி 2300 பணத்தை ஜிபே மூலம் பறித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 14, 2025

தூத்துக்குடி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

image

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <>க்ளிக்<<>> செய்து அப்பளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்க… புதுமணதம்பதிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு SHARE பண்ணுங்க…

News September 14, 2025

தூத்துக்குடி: 558 வழக்குகளுக்கு தீர்வு

image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் நேற்று (செப்.13) நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் கோவில்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை தலைமையில், மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் (எண்.1) ஆனந்த், (எண்.2) மணிமேகலா ஆகியோர் முன்னிலையில்விபத்து வழக்கு, உரிமையியல் வழக்குகள், சிறு, குறு வழக்கு என 558 வழக்குகளுக்கு சமரசம் மூலம் தீர்வு காணபட்டது.

error: Content is protected !!