News January 31, 2026
தூத்துக்குடியில் இன்று இங்கெல்லாம் மின்தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஜன.31) பல்வேறு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 – மாலை 4 மணி வரை பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர், கோவில்பட்டி, நாசரேத், எட்டையபுரம், கடலையூர், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், விஜயபுரி, செட்டிகுறிச்சி, நாகலாபுரம், வெம்பூர் ஆகிய ஊர்களின் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 10, 2026
தூத்துக்குடி: ரூ.48,480 சம்பளத்தில் வங்கி வேலை

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 10, 2026
தூத்துக்குடி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா ?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News February 10, 2026
தூத்துக்குடி: 25 ஆண்டுகள் தலைமறைவு; நேற்று கைது!

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1997ஆம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய திருநெல்வேலியைச் சேர்ந்த சேகர்(54), நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து 2001ஆம் ஆண்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. போலீஸார் நீண்ட தேடுதலுக்குப் பிறகு, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் டிஎஸ்பி சுனில் மேற்பார்வையில் சேகரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


