News April 13, 2025
தூத்துக்குடி:திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு CALL பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.இதை ஷேர் செய்யுங்கள்.
Similar News
News April 15, 2025
தூத்துக்குடியில் ரூ.50,000 ஊதியத்தில் வேலை

தூத்துக்குடியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் கள தொழில்நுட்ப வல்லுநர் பிரிவில் 20 பேர் நிரப்பப்பட உள்ளனர். இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-29 வயதிற்குட்பட்ட ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
News April 15, 2025
தூத்துக்குடி இரவு ரோந்து காவலர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்பொழுதே வெளியிட்டுள்ளது.
News April 14, 2025
சாத்தான்குளம் அருகே காவலரின் தாய் வீடு புகுந்து கொலை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் காவலராக விக்ராந்த் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில், இன்று (பிப்.14) காலை அவர் பணிக்கு வந்து விட்டார். இன்று வீட்டில் தனியாக இருந்த அவரது தாய் வசந்தா (65) என்பவரை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.