News January 6, 2026
தூத்துக்குடிக்கு இலவச புகார் எண் அறிவிப்பு

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பல்வேறு நேரங்களில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறும் சூழல் ஏற்படுகிறது. இதனை உடனே சீர் செய்ய தூத்துக்குடி மாநகராட்சி இலவச தொலைபேசி எண்ணை (18002030401) அறிவித்துள்ளது. இதில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் மற்ற பல்வேறு அடிப்படை புகாரினையும் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க.
Similar News
News February 16, 2026
தூத்துக்குடிக்கு புதிய எஸ்.பி பதவியேற்பு

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் சி.மதன் இன்று பொறுப்பேற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த என்.சிலம்பரசன், சென்னை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் உதவித் தலைமை காவல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, திருநெல்வேலி மாநகர மேற்கு பகுதி துணை ஆணையராக இருந்த டாக்டர் சி.மதன் பதவியேற்றார்.
News February 16, 2026
தூத்துக்குடி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க
News February 16, 2026
தூத்துக்குடியில் இலவச வீட்டு மனை வேண்டுமா..?

தூத்துக்குடி மக்களே, தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு வருவாய் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.


