News February 25, 2026
தூங்கும் முன் இதை செய்யாதீங்க.. DANGER

தூக்கமே போச்சு என்று புலம்பும் பலரும், அந்த தூக்கத்தை தொலைத்தது நாம் தான் என்பதை ஒப்புக்கொள்ள தயங்குவோம். ஆனால், ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். எனவே, நன்றாக ஆழ்ந்து தூங்குவதற்கு, படுக்கைக்குச் செல்லும் முன் சில விஷயங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அவை என்னென்ன என்பதை மேலே உள்ள போட்டோஸை swipe செய்து பாருங்கள். தூக்கமின்றி தவிக்கும் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News February 26, 2026
7 தொகுதிகள், தனிச் சின்னம்.. பாரிவேந்தரின் டிமாண்ட்!

NDA கூட்டணியில் உள்ள IJK-வின் நிறுவனர் பாரிவேந்தர் மற்றும் ரவி பச்சைமுத்து ஆகியோர் EPS-ஐ நேரில் சந்தித்து பேசினர். அப்போது, வரும் தேர்தலில் IJK போட்டியிட விரும்பும் 7 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாரிவேந்தர் வழங்கியுள்ளார். மேலும், இத்தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் IJK-வுக்கு 2 – 3 தொகுதிகள் வரை வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News February 26, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை மேலும் குறைந்தது!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. காலையில் 1 அவுன்ஸ்(28g) $5,208 ஆக இருந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி $21 குறைந்து (₹1,908) மளமளவென குறைந்து $5,187 ஆக உள்ளது. வெள்ளி விலையும் $2.33 ஆக குறைந்துள்ளது. இதனால் இந்திய சந்தையிலும் வரும் நாள்களில் தங்கம் விலை குறையும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இது நகைப் பிரியர்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது.
News February 26, 2026
யார் தான் காங்கிரஸ்? ஒன்னுமே புரியலங்க..

ஆட்சி அதிகாரத்தில் பங்கு, தவெகவுடன் பேச்சுவார்த்தை என தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில், இது அவரது தனிப்பட்ட கருத்து என செல்வப்பெருந்தகை, விஜய் வசந்த் ஆகியோர் கூறியுள்ளனர். தமிழக காங்., கட்சி மேலிட பொறுப்பாளர் கூறுவதையே சொந்த கருத்து என சக கட்சியினர் கூறுவதால், யார் கூறுவதை தான் கட்சியின் நிலைப்பாடாக எடுப்பது என தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.


