News February 18, 2026
துவாக்குடி: சர்வீஸ் சாலை குறித்த அறிவிப்பு

திருச்சி, பால்பண்ணையில் இருந்து துவாக்குடி வரை 14.5 கி.மீ நீளத்திற்கு, திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சர்வீஸ் சாலை அமைக்கும் பணிக்காக 9 கிராமங்களில் நிலம் எடுப்பு பணி நிறைவு பெற்றுள்ளது. மேலும் 7 கிராமங்களில் நிலம் எடுப்பு பணி முடிக்கப்பட்டு, சாலை அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 20, 2026
திருச்சி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

திருச்சி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 20, 2026
திருச்சி: மாவட்ட கண்காணிப்பு அதிகாரி நியமனம்

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்களை கண்காணிக்க மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருச்சி மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக, அரசு தேர்வுகள் இயக்குனரக இணை இயக்குனர் டி.ராஜேந்திரனை நியமனம் செய்து, பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திரமோகன் உத்தரவிட்டுள்ளார்.
News February 20, 2026
திருச்சி: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

திருச்சி மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!


