News March 29, 2025
துறையூர்: வலிப்பு நோயால் கிணற்றில் தவறி விழுந்து பலி

துறையூர் அருகே பொன்னுசங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன்(38). இவர் இன்று காலை துறையூர் பெரிய ஏரி பகுதியில் விவசாய வேலைக்காக சென்றுள்ளார். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கிணறு ஒன்றில் சரவணன் தவறி விழுந்து பரிதமாக உயிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News April 1, 2025
BREAKING: தமிழகத்தின் அடுத்த தலைநகர் திருச்சி?

தமிழக சட்டசபை கூட்டத்தில் இன்று எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசுகையில், “திருச்சியை தமிழகத்தின் தலைநகராக அறிவிக்க வேண்டும்” என்ற கோரிகையை முன்வைத்து பேசினார். இதற்கு சபாநாயகர் அப்பாவு, “இதுகுறித்து பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்தார். திருச்சி தலைநகர் ஆகவேண்டுமா? உங்களது கருத்துக்களை COMMENTல் சொல்லுங்க, SHARE பண்ணுங்க..
News April 1, 2025
12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு SBI வங்கியில் வேலை

திருச்சி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் தற்காலிக அலுவலக உதவியாளர் பணிவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி அடிப்படையில் 25,000 முதல் சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு <
News April 1, 2025
அங்கன்வாடி ஆசிரியராக இலவச பயிற்சி!

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை <