News May 16, 2024
துறையூர்: இரங்கல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி

துறையூர் ஓங்கார குடில், அகஸ்தியர் சன்மார்க்க சங்க நிறுவன ஸ்தாபகர் ரெங்கராஜன் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி சார்பில் நேற்று(மே 15) இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ஸ்தாபகர் ரெங்கராஜன் தேசிக சுவாமிகளை இழந்து வாடும் அவரது ஆன்மீக பக்தர்களுக்கு அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News August 14, 2025
திருச்சி: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான ‘ஓரியண்டல் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதில் தமிழகத்திற்கு மட்டும் 37 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News August 14, 2025
திருச்சி: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை (பாகம்-2)

▶️ வயது வரம்பு – 21-33 (ஓபிசி – 33, எஸ்.சி – 35, மாற்றுத்திறனாளிகள் – 40)
▶️ இடஒதுக்கீடு: SC – 12, ST – 1, OBC – 17, EWS – 1, பொதுப்பிரிவு – 6
▶️ சம்பளம் : ரூ.22,405 முதல் ரூ.62,265
▶️ விண்ணப்ப கட்டணம்: ரூ.850 ( எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் ரூ.100)
▶️ தமிழ்நாட்டிலேயே பணி நியமனம் வழங்கப்படும்
▶️ அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
News August 14, 2025
Way2News எதிரொலி: மாந்துறையில் குடிநீர் குழாய் சீரமைப்பு

திருச்சி மாவட்டம், மாந்துறை சரஸ்வதி கல்லூரி அருகில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு சாலை ஓரத்தில் தண்ணீர் தேங்கி நிற்பது குறித்து Way2News-இல் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேற்று குழாய் கசிவை சரி செய்து, தண்ணீர் தேங்கி இருந்த இடத்தில் மணல் நிரப்பி சாலையை சீரமைத்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.