News August 30, 2025

துறையூரில் விபத்தில் பலியான இளைஞர்

image

திருச்சி மாவட்டம், துறையூரில் ஆத்தூர் சாலையில் இன்று இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் நிலை தடுமாறி எதிரே வந்த வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 30, 2025

திருச்சி ரயில்வே கோட்டம் சாதனை

image

திருச்சி ரயில்வே கோட்டம் நடப்பு நிதியாண்டில் 149 நாட்களுக்குள், 6 மில்லியன் டன் சரக்கு போக்குவரத்தை கையாண்டு சாதனை படைத்துள்ளது. கடந்த 27-ம் தேதி அன்று திருச்சி கோட்டத்தில் சரக்கு ரயில் மூலம் 6.024 மில்லியன் டன் அளவுக்கு சரக்குகள் கையாளப்பட்டுள்ளது. இதன் மூலம் முந்தைய நிதியாண்டை விட 6.4 சதவீதம் சரக்குகளை கையாளும் திறன் அதிகரித்துள்ளதாக திருச்சி ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News August 30, 2025

திருச்சி: உங்கள் நிலத்தை கண்டுபிடிக்க எளிய வழி

image

திருச்சி மக்களே, நீங்கள் வாங்கிய நிலம் அல்லது உங்கள் குடும்பத்தின் பூர்வீக நிலங்களின் பத்திரங்கள் கையில் இருந்தும், நிலம் சரியாக எங்கு உள்ளது என்று உங்களுக்கு தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம். உங்கள் நிலங்களை கண்டுபிடிக்க <>இங்கே கிளிக்<<>> செய்து, பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை ஒரு பைசா செலவில்லாமல் எளிமையாக கண்டுபிடிக்க முடியும். இதனை ஷேர் பண்ணுங்க!

News August 30, 2025

திருச்சி: பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

image

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2025-26ஆம் நிதியாண்டில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப்.2-ம் தேதியும், பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு செப்.3-ம் தேதியும் திருச்சி மாவட்ட அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு பேச்சு போட்டியில் தனித்தனியாக திருச்சி மாவட்ட மையம் நூலக கூட்டரங்கில் நடைபெறும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!