News December 1, 2025

துரோகத்தின் சம்பளம் மரணம்.. மனைவி சடலத்துடன் Selfie!

image

இறந்த மனைவியின் உடலுடன் Selfie எடுத்து, ‘துரோகத்தின் சம்பளம் மரணம்’ என கணவர் ஸ்டேட்ஸ் வைத்த சம்பவம் அதிரவைத்துள்ளது. நெல்லையை சேர்ந்த பாலமுருகன், ஸ்ரீபிரியாவிற்கு திருமணமான நிலையில், ஸ்ரீபிரியா வேறொருவருடன் பழகுவதாக பாலமுருகன் குற்றம்சாட்டினார். இதனால், ஸ்ரீபிரியா கோவையிலுள்ள ஹாஸ்டலில் தனியாக வசித்து வந்துள்ளார். அவரை அழைக்க சென்ற போது நடந்த தகராறில், பாலமுருகன் ஸ்ரீபிரியாவை கொலை செய்துள்ளார்.

Similar News

News December 4, 2025

RO-KO விவகாரம்.. கம்பீர், அகர்கரை சாடிய ஹர்பஜன்

image

RO-KO மற்றும் கம்பீர், அகர்கர் இடையே உறவு மோசமாகி வரும் நிலையில், ஹர்பஜன் சிங் கூறிய கருத்து பேசுபொருளாகியுள்ளது. தங்களது கிரிக்கெட் கரியரில் போதிய சாதனைகளை படைக்காத தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், பல சாதனைகளை படைத்துள்ள RO-KOவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், தான் உள்பட கடந்த காலங்களில் பல வீரர்களும் இதுபோன்ற அனுபவங்களை சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 4, 2025

புயல் அலர்ட் 20 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

image

சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடலூர், கோவை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருவாரூர், தஞ்சை, விழுப்புரம், சிவகங்கை மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கை, சேலம், நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் IMD கணித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்த நிலையிலும் மழை பெய்து வருகிறது.

News December 4, 2025

மோடி அரசே ரூபாய் மதிப்பு குறைவுக்கு காரணம்: கார்கே

image

மத்திய அரசின் கொள்கைகளே ரூபாயின் மதிப்பு குறைந்ததற்கு காரணம் என மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். மோடி அரசின் திட்டங்கள் சரியானதாக இருந்தால் ரூபாயின் மதிப்பு சரிந்திருக்காது எனவும் அவர் சாடியுள்ளார். 2014-ல் குஜராத் CM-ஆக இருந்த மோடி, ரூபாய் மதிப்பு குறைந்ததற்கு காங்கிரஸை குற்றம்சாட்டியதை சுட்டிக்காட்டி, இப்போது நீங்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என PM-யிடம் கார்கே கேட்டுள்ளார்.

error: Content is protected !!