News September 23, 2025
துப்பாக்கி சுடும் போட்டி – பள்ளி மாணவிக்கு அமைச்சர் பாராட்டு

திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த மோகன் – பிரபா தம்பதியினரின் மகளான, 12ம் வகுப்பு மாணவி சுகித்தா மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றிபெற்று தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். துப்பாக்கி சுடும் போட்டியில் தேசிய போட்டிக்கு தகுதி பெற்ற மாணவி சுகித்தாவுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பாராட்டு தெரிவித்துள்ளார்.
Similar News
News September 23, 2025
மயிலாடுதுறை – திருச்சி மெமு ரயில் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக மயிலாடுதுறை – திருச்சிராப்பள்ளி மெமு ரயிலானது வரும் 24, 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில், மயிலாடுதுறை – தஞ்சாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மேற்குறிப்பிட்ட செய்திகளில் தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து காலை 9:10 மணிக்கு புறப்பட்டு திருச்சிராப்பள்ளி வந்தடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 23, 2025
திருச்சி: BE முடித்தால் இந்தியன் வங்கியில் வேலை!

திருச்சி மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், <
News September 23, 2025
திருச்சி: ரயில் நிலையத்தில் சிறுவன் மீட்பு

ரயில்வே பாதுகாப்பு படையினர் “ஆபரேஷன் நன்கே பரிஸ்டே” என்ற முன்னெடுப்பின் கீழ், ரயில் நிலையங்களில் ஆதரவின்றி சுற்றித்திரியும் குழந்தைகளை மீட்டு குழந்தைகள் உதவி மையத்தில் ஒப்படைத்து வருகின்றனர். இந்நிலையில்
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இன்று காலை சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த ஒரு சிறுவனை, ஆர்.பி.எப் காவலர்கள் மீட்டு ரயில் நிலையத்தில் உள்ள குழந்தைகள் உதவி மையத்தில் ஒப்படைத்தனர்.