News October 19, 2024
துப்பாக்கியால் சுட்ட வழக்கில் ஒருவர் கைது

எருமைப்பட்டி அருகே குருவனம் என்பவரது தோட்டத்தில் அருகே சுப்பிரமணி என்பவர் செல்லும்போது, அப்பகுதியில் இருந்து நாட்டுத் துப்பாக்கி வெடித்தது. இதில் சுப்பிரமணி காயமடைந்தார். இது குறித்து எருமைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கொல்லிமலை பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் துப்பாக்கியை உரிமம் இல்லாமல் வைத்திருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்தனர்.
Similar News
News November 13, 2025
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு!

நாமக்கல்லில் இன்று நவம்பர்-13ஆம் தேதி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவில் கூட்டம் நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.5.85 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்தது. இதனிடையே நேற்று 12ம் தேதி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.80 ஆக இருந்தது.
News November 13, 2025
நாமக்கல் விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

நாமக்கல்லில் சிறப்பு பருவ பயிர்களான நெல்-II (ம) சிறிய வெங்காயம்-II சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, கூட்டுறவு கடன் சங்கங்களிலோ, பொது சேவை மையங்களிலோ பிரீமியத் தொகையாக, நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.567.61-ம், சிறிய வெங்காயத்திற்கு ரூ.2087.16-ம் செலுத்தி காப்பீடு செய்யலாம். காப்பீடு செய்ய கடைசி தேதி: நெற்பயிருக்கு டிச.16 (ம) சிறிய வெங்காயம் பயிருக்கு டிச.01 ஆகும்
News November 13, 2025
மோகனூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை!

மோகனூர் காவல் சரகத்திற்குட்பட்ட ஆரியூர் ஊராட்சி நடுப்பட்டியை சேர்ந்த பழனிசாமி. இவருடைய மணிகண்டன் (27), கூலித்தொழலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் 16 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இது குறித்து சிறுமியின் குடும்பத்தினர் மோகனூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.


