News December 7, 2025

துப்பாக்கிச்சூடு: குழந்தைகள் உள்பட 11 பேர் பலி

image

தெ.ஆப்பிரிக்காவின் நிர்வாக தலைநகரான பிரிட்டோரியா அருகே உள்ள சால்ஸ்வில்லே நகரில், மதுபான விடுதியில் நுழைந்த கும்பல் ஒன்று சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், 3 வயது, 12 வயது என 3 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்த நிலையில், 14 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வரும் போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News

News December 11, 2025

யூடியூப்பை பார்த்து ஆபரேஷன்.. பெண் துடிதுடித்து மரணம்!

image

உ.பி.,யில் மனைவி வயிற்று வலியால் துடிக்க, கணவர் கிளினிக் ஒன்றுக்கு அழைத்துச் செல்கிறார். கிட்னியில் கல் இருப்பதாக கூறிய டாக்டர்கள், அவருக்கு ஆபரேஷன் செய்கின்றனர். youtube பார்த்து சிகிச்சை செய்த டாக்டர் பிரகாஷ், மதுபோதையில் அப்பெண்ணின் வயிற்று நரம்புகளை துண்டிக்க, அவர் உயிரிழந்துள்ளார். ஃபீஸாக ₹20,000 பணத்தையும் கொடுத்து, மனைவியையும் இழந்து தவிக்கிறார் கணவர். டாக்டர்களே இப்படி இருந்தால்…?

News December 11, 2025

கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்குக: தமிழச்சி MP

image

Ex CM கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என MP தமிழச்சி தங்கப்பாண்டியன் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் பேசிய அவர், ஆட்சி அதிகாரத்தில் பிற இந்திய மாநிலங்களுக்கு கருணாநிதி முன்னுதாரணமாக திகழ்ந்தவர் என குறிப்பிட்டார். மேலும், சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் கருணாநிதி சாம்பியனாக திகழ்ந்தார் என்றும் கூறினார்.

News December 11, 2025

1,000 ஆண்டுகள் பழமையான கோயில்கள் PHOTOS

image

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. அவற்றில் சில கோயில்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டவை. அவை மிகவும் பழமையானவை மட்டுமல்ல, வரலாற்று சின்னமாகவும் திகழ்கின்றன. உங்களுக்காக, மேலே 1,000 ஆண்டுகள் பழமையான கோயில்களை, போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

error: Content is protected !!