News June 27, 2024
துணை வேந்தருக்கு வழங்கபட்ட பதவி

தேசிய மாணவர் படை சார்பாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் கீதாலட்சுமிக்கு கௌரவ கர்னல் பதவி சின்னம் வழங்கும் விழா இன்று பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தேசிய மாணவர் படையின் துணை இயக்குனர் காமடோர் அதுல் குமார் ரஸ்தோகி கலந்துகொண்டு கௌரவ பதவி சின்னத்தை துணை வேந்தர் கீதாலட்சுமிக்கு வழங்கினார்.
Similar News
News March 2, 2026
கோவை: அதிமுகவில் இணைந்த தவெகவினர்

கோவை வடக்கு தொகுதி பூசாரிபாளையத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், அக்கட்சியிலிருந்து விலகி எம்.எல்.ஏ அம்மன் K.அர்ச்சுணன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதய தெய்வம் மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் துரைசாமி, பார்த்திபன், பகுதி செயலாளர் நடராஜ் ஆகியோர் பங்கேற்றனர். இணையும் நிர்வாகிகளுக்குச் சால்வை அணிவித்து அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
News March 2, 2026
சூலூர் அருகே கார் மோதி குழந்தை பலி

சூலூர் நடுப்பாளையத்தில் ஆரோக்கியதாஸின் ஒன்றரை வயது மகள் ஜோஸ்லின், பெரியப்பா ஆண்ட்ரூஸ் காரை பின்புறமாக இயக்கியபோது எதிர்பாராத விதமாக மோதி பலியானார். குழந்தை பின்னால் இருப்பதை அறியாமல் காரை எடுத்ததால் இந்தச் சோகம் நிகழ்ந்தது. தலையில் பலத்த காயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துச் சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 2, 2026
கோவை – அபுதாபி விமான சேவை ரத்து

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. இதனால் துபை உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான் வழியை மூடி உள்ளன. இதன் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு வாரத்தில் 4 நாள்கள் இண்டிகோ விமானங்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


