News January 31, 2025
துணை ராணுவத்தில் டிரைவர் வேலை

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர், ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10 வகுப்பு தேர்ச்சி தகுதி போதும். ரூ.21,700- ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். <
Similar News
News November 11, 2025
திருப்பூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளிகள் அறிவிப்பு

தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனரகம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தின் 3 சிறந்த பள்ளிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், திருப்பூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட விஜயபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தாராபுரம் வட்டம் குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட ஏரகாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தாராபுரம் வட்டம் காரத்தொழுவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவை தேர்வு பெற்றுள்ளன.
News November 11, 2025
குண்டு வெடிப்பில் 13 பேர் பலி: திருப்பூரில் சோதனை

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் எதிரொலியாக திருப்பூர் ரயில் நிலையத்தில் ஆர்.பி.எப், வெடிகுண்டு தடுப்பு பரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் சோதனை (ம) பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
News November 11, 2025
திருப்பூர் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது, திருப்பூர் மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள். ஊத்துக்குளி சப்பட்டை நாயகன் பாளையம் சமுதாய நல கூட்டத்திலும், உடுமலை வட்டாரம் மலையாண்டிபாளையம் சமுதாய நலக்கூடத்திலும் நடைபெற உள்ளது. முகாமில் பொதுமக்கள் மனுக்கள் வழங்கி பயன் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.


