News October 24, 2024
துணை மேயரின் பேச்சை நிறுத்துமாறு குறுக்கீடு
சென்னையை விட மதுரையில் மட்டுமே குப்பை வரி அதிகமாக வசூல் செய்யப்படுகிறது. துணை மேயர் பேசி கொண்டிருக்கும் போதே துணை மேயரின் பேச்சை நிறுத்துமாறு திமுக மாமன்ற உறுப்பினர்கள் குறுக்கீடு செய்தனர். ஆலோசனை கூட்டத்தில் துணை மேயர் தங்களுடைய கருத்துகளை பேச வேண்டும் என திமுக மாமன்ற உறுப்பினர்கள் பேச்சு இதற்கு பதிலளித்த துணை மேயர் நாகராஜன் “மாநகராட்சியில் ஆலோசனை கூட்டத்திற்கு என்னை அழைப்பதில்லை, என்றார்.
Similar News
News November 20, 2024
அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்க விண்ணப்பிக்கவில்லை
அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனம் விண்ணபிக்கவில்லை என தமிழக அரசு தரப்பில் தற்போது இன்று(நவ.20) தகவல் வெளியாகியுள்ளது. பின் அனுமதியளித்த மத்திய அரசு எந்த பகுதியில், எந்த அளவுக்கோலில் அனுமதி அளித்தது என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. சுரங்கம் அமைப்பது குறித்து சில தினங்களாக தமிழ்நாட்டில் கருத்து அலைகள் வீசிவந்த நிலையில் அது குறித்த விளக்கம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
News November 20, 2024
மதுரை மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை
மதுரையில் தொடர் மழை பெய்து வருவதால் நன்னீரில் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் பரவுகிறது. மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதித்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கு டெங்கு பாதித்துள்ளது. எனவே மக்கள் வீடுகளில் தண்ணீரை கொதிக்க வைத்து பருக வேண்டும் என சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
News November 20, 2024
மதுரையில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
மதுரை உட்பட 13 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இன்று(நவ.,20) இதுவரை 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.