News February 27, 2026

துணை முதல்வர் பதவி கேட்கிறாரா கனிமொழி?

image

டெல்லி அரசியலில் தீவிரம் காட்டிவந்த கனிமொழி தற்போது மாநில அரசியலில் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறார். வரும் தேர்தலில் இவர் திருச்செந்தூர் தொகுதியில் <<19250439>>போட்டியிடவுள்ளதாக<<>> கூறப்படுகிறது. அத்துடன் இவர் துணை முதல்வர் பதவியும் வேண்டும் என தலைமையிடம் கேட்டிருக்கிறார் என்கின்றனர். இதற்கு திமுக தலைமையும் ஆமோதித்திருப்பதாக கூறப்படுவதே தற்போது தமிழ்நாடு அரசியல் களத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

Similar News

News March 1, 2026

முருகனிடம் வேண்டிய போது வருத்தமாக இருந்தது: PM

image

தமிழக மக்களின் நலனுக்காக திருப்பரங்குன்றம் முருகனிடம் வேண்டிக்கொண்டதாக PM மோடி கூறியுள்ளார். இந்த தரிசனம் ஆன்மிக நிறைவை தந்தபோதும், மனம் வருத்தமடைந்தது என்று பேசிய அவர், திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக்கோரி தற்கொலை செய்துகொண்ட பூரணசந்திரனை நினைத்து வருந்தினேன் என கூறியுள்ளார். மேலும், திமுக அரசின் மனிதநேயமற்ற தன்மையே இதற்கு காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

News March 1, 2026

210 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியமைப்போம்: EPS

image

வரும் தேர்தலில் 210 தொகுதிகளில் NDA கூட்டணி வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும் என EPS தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் ஹாஸ்பிடல் பணி உள்பட பல திட்டங்களை DMK அரசு முடக்கப் பார்ப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு TN-க்கு எதுவும் செய்யவில்லை என ஸ்டாலின் அவதூறு பரப்புவதாகவும், மத்தியில் காங்., ஆட்சியில் திமுக அங்கம் வகித்தபோது TN-க்கு என்ன செய்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 1, 2026

PM KISAN திட்ட தவணை ₹2,000.. வந்தது UPDATE

image

PM KISAN திட்டத்தின் 22-வது தவணை (₹2,000) எப்போது கிடைக்கும் என்பதே நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஹோலி பண்டிகைக்கு முன்பே (மார்ச் 4) பணம் வரவு வைக்கப்படும் என ஏற்கெனவே தகவல் வெளியானது. ஆனால், தொகையை விடுவிப்பதில் தாமதம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. எனினும், மார்ச்சில் ₹2,000 கிடைக்க வாய்ப்புள்ளதாம். அதற்குள் KYC அப்டேட் உள்ளிட்டவற்றை நிறைவு செய்யுங்கள் விவசாய பெருமக்களே!

error: Content is protected !!