News April 2, 2024

துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தேர்வு

image

பாராளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு  வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு தேவையான துணை மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்களை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (ஏப்ரல் 2) நடந்தது. இதில் தேர்தல் பொது பார்வையாளர் ரூபேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News February 17, 2026

வேலூரில் தறிகெட்டு ஓடி மரத்தில் சொருகிய ஆட்டோ!

image

வள்ளிமலை அருகே கொக்கேரி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் நேற்று புதிதாக ஆட்டோவை வேலூரில் உள்ள ஷோரூமில் வாங்கியுள்ளார். பின்னர் வேலூரில் இருந்து கொக்கேரிக்கு ஆட்டோவை குமரேசன் ஓட்டிச் சென்றார். மாலை சுமார் 6 மணி அளவில் சைனாம்பட்டறை பகுதியில் வேகமாக வைத்த ஆட்டோ திடீரென நிலை தடுமாறி பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் குமரேசன் படுகாயம் அடைந்தார். இதில் புதிய ஆட்டோ நசுங்கி சுக்கு நூறானது.

News February 17, 2026

வேலூரில் ரத்தம் சொட்ட சொட்ட சரிந்த முதியவர்!

image

வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ஜெயக்குமார் (73), இவர் பிப்ரவரி 15-ம் தேதி மாலை சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலையில் அன்பூண்டி புதிய பஞ்சாயத்து அருகே அலுவலகம் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த பைக் ஜெயக்குமார் மீது மோதியது. இதில் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் முதியவர் பலியானார். இது குறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 17, 2026

வேலூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (பிப்.16) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!