News September 5, 2025

துணை தாசில்தார் பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு

image

புதுச்சேரி அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள 30 துணை தாசில்தார் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டது. இத்தேர்விற்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான தேர்வு கடந்த 31ம் தேதி நடந்தது. தேர்வு முடிவுகளைப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ளது.

Similar News

News September 5, 2025

புதுச்சேரி: செல்போன் தொலைந்தால் இத பண்ணுங்க!

image

புதுச்சேரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில் <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News September 5, 2025

புதுச்சேரியில் நாளை பொதுமக்கள் குறை தீர்வு முகாம்

image

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி, புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் நாளை 6ஆம் தேதி சனிக்கிழமை பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம்.” என கூறப்பட்டுள்ளது.

News September 5, 2025

ராணுவ கல்லுாரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

image

உத்தராகண்ட் மாநிலம், டேராடூனில் அமைந்துள்ள இந்திய தேசிய இராணுவ கல்லுாரியில் 01.07.2026ல் எட்டாம் வகுப்பில் சேர்வதற்கு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார்ப் பள்ளி மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புதுச்சேரி அரசு கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!