News March 29, 2025
துக்க வீட்டிற்கு சென்றவர் தண்ணீரில் மூழ்கி பலி

சீதபற்பநல்லூர் அருகே உள்ள புதூரை சேர்ந்தவர் வள்ளிநாயகம் (62) அதே ஊரில் வசித்த அவரது உறவினர் ஒருவர் இறந்து விட்டார். துக்க வீட்டிற்கு சென்று அவர் நேற்று (மார்ச்.28) அங்குள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கினார். தொடர்ந்து இரவு நேரம் ஆனதால் அவரை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. இன்று காலை அவரது உடலை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 10, 2025
119 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள்

நெல்லை மாவட்டத்தில் இயங்கி வரும் சத்துணவு மையங்களில், 119 சமையல் உதவியாளர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கு தகுதியான பெண்கள், வரும் 15ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். இதற்கான மாதிரி விண்ணப்ப படிவம் www.tirunelveli.nic.in மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News April 10, 2025
நெல்லை: ம.சு பல்கலைக்கழக பேராசிரியர் மீது பாலியல் புகார்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுவதிலிருந்து தற்போது கல்லூரியில் வேலை செய்யும் வரை தொடர்ந்து பாலியல் ரீதியான துன்புறுத்தலை வேதியியல் துறை பேராசிரியர் கொடுப்பதாக தற்காலிக பேராசிரியர் ஒருவர் மாநில மகளிர் ஆணையத்திற்கும் உயர்கல்வி துறைக்கும் மனு அனுப்பியுள்ளார். இந்த குற்றச்சாட்டு குறித்து பல்கலைக்கழகம் விசாரிக்க தமிழக உயர் கல்வி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
News April 10, 2025
12ஆம் தேதி ரேஷன் அட்டை குறைதீர்க்கும் முகாம்

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் நேற்று (ஏப்ரல் 9) விடுத்துள்ள செய்தி குறிப்பு: வரும் 12ஆம் தேதி சனிக்கிழமை குடும்ப அட்டை குறைதீர்க்கும் முகாம் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடைபெற உள்ளன. புதிய குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் மனு அளித்து பலனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.