News April 8, 2024
தீ வைக்கும் போதை ஆசாமிகளால் அபாயம்

காங்கேயத்தை அடுத்த கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அகிலாண்டபுரம் பிரிவில் காங்கேயம் ஒழுங்கும் முறை விற்பனை கூடம் இயங்கி வருகிறது. இங்கு கடந்த சில நாட்களாக போதை ஆசாமிகள் மது மற்றும் கஞ்சா போதையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் வளாகத்தினுள் தீ வைத்து விட்டு சென்று விடுவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
Similar News
News August 14, 2025
திருப்பூர்: ’ஆக.15’ இதை செய்ய வேண்டாம்! – கலெக்டர்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் ஓட்டல்களுடன் கூடிய பார்கள் என அனைத்துக் கடைகளும் நாளை(ஆக.15) சுதந்திர தினத்தை முன்னிட்டு மூடப்படுகிறது. இந்நிலையில், நாளை சட்டவிரோதமாக ஏதேனும் மது பான விற்பனையை கண்டால் உடனே 10581-ஐ அணுகி புகார் அளிக்கலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News August 14, 2025
முதல்வரின் மினி விளையாட்டு அரங்கம் இன்று திறப்பு

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ. 3 கோடி மதிப்பில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் கட்டப்பட்டது. இதை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காலை 10.00 மணி அளவில் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்கள்.
News August 13, 2025
திருப்பூர்: ரூ.62265 சம்பளம் அரசு உதவியாளர் வேலை: APPLY NOW

திருப்பூர் மக்களே மத்திய அரசின் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் ரூ.62265 வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <