News January 22, 2026
‘தீ பரவட்டும்’ CM ஸ்டாலின் கடிதம்

பாஜக அரசின் வஞ்சகத்தை தட்டிக் கேட்கும் துணிச்சல் திமுகவுக்கே உள்ளதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாளையொட்டி அவர் எழுதிய கடிதத்தில், 2026 தேர்தல் களமானது ஆரிய-திராவிட போரின் மற்றொரு களம்; இந்த ஜனநாயகப் போர்க்களத்தில் திமுகவினருக்கு ஓய்வில்லை, உறக்கமில்லை என தெரிவித்துள்ளார். மேலும், தீ பரவட்டும் என இனம், மொழி காத்திடும் போரை தொடர்ந்திடுவோம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News April 3, 2026
கருணாநிதியை கைதியாக வைத்திருந்த ஸ்டாலின்: EPS

திமுகவின் இறுதி அத்தியாயத்தை ஸ்டாலின் எழுதுவதாக EPS கூறியுள்ளார். கருணாநிதியின் இறுதிக்காலத்தில் ஸ்டாலின் அவரை கைதியாக வைத்திருந்தார் என ஆ.ராசா பேசியதாக <<19548289>>ஆடியோ<<>> வெளியாகி வைரலானது. இதை சுட்டிக்காட்டி பேசிய அவர், அப்பாவையே அப்படி வைத்தவர் மக்களை எப்படி வைப்பார் என்றார். மேலும், ஸ்டாலினுடன் பிரச்னை ஏற்பட்டதால்தான் தேர்தலில் போட்டியிட கனிமொழிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News April 3, 2026
‘காதலர் தினம்’ நடிகை மீது கேஸ் போட்ட விவசாயி

‘காதலர் தினம்’ சோனாலி பிந்த்ரே & அவரது கணவர் மீது விவசாயி ஒருவர் நில அபகரிப்பு வழக்கு தொடுத்துள்ளார். புனேவின் மாவலில் உள்ள தனக்கு சொந்தமான 75 சென்ட் பூர்விக நிலத்தை நடிகையும் அவரது கணவரும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததுடன் மிரட்டுவதாகவும் சந்திரகாந்த் ஷிண்டே என்பவர் புகார் அளித்துள்ளார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சோனாலி பிந்த்ரே, பணம் பறிக்க பொய் வழக்கு போட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.
News April 3, 2026
₹40,000 சம்பளம், 667 காலியிடங்கள்.. APPLY NOW

மத்திய அரசின் கீழ் செயல்படும் மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் 667 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மைனிங், சர்வேயர் உள்ளிட்ட பணிகளுக்கு +2, டிப்ளமோ கல்வித்தகுதி போதுமானது. ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ₹40,000-க்கு மேல் சம்பளம் வழங்கப்படும். 18-30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த <


