News November 19, 2025
தீவிரவாத வழக்கில் கைதான டாக்டர் மீது ஜெயிலில் தாக்குதல்

குஜராத்தில் கடந்த 9-ம் தேதி அகமது மொய்தீன் உட்பட 3 டாக்டர்கள், அபாயகரமான ரசாயனத்துடன் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்ததாக கைது செய்யப்பட்டனர். குஜராத் சபர்மதி சென்ட்ரல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அகமது மீது, சக கைதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், தாக்குதலின் காரணம் குறித்து விசாரித்து வருவதாக கூறியுள்ளனர்.
Similar News
News April 1, 2026
சுயமரியாதையே இல்லாத EPS: ஸ்டாலின்

மதுரை கூட்டத்தில் பெரியார் படத்தை பாஜக நீக்க சொன்னதும் சுயமரியாதையே இல்லாமல் EPS அதை எடுத்ததாக ஸ்டாலின் சாடியுள்ளார். அங்கு அண்ணாவை இழிவுப்படுத்தி வெளியிட்ட காணொலி அதிமுக மாஜிக்கள் கொஞ்சம் கூட சொரணை இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்ததாக விமர்சித்த அவர், MGR, ஜெ., இருந்திருந்தால் இது நடந்திருக்குமா என்றார். திராவிடம் பற்றி தனக்கு தெரியாது என சொன்னவர் தான் துப்புக்கெட்ட EPS எனவும் கூறியுள்ளார்.
News April 1, 2026
Online-ல் பணம் இழந்துட்டீங்களா? உடனே Do this

டிஜிட்டல் கொள்ளையர்கள் மக்களிடமிருந்து டிசைன் டிசைனாக பணத்தை திருடுகின்றனர். இதில் பணத்தை இழந்தால் அதை மீட்க வழி இருக்கிறது. தேசிய சைபர் க்ரைமின் 1930 எண்ணிற்கு அழைத்து புகாரளியுங்கள். பணம் பறிபோன 1 மணி நேரத்திற்குள் புகாரளித்தால் அதனை மீட்பது எளிது. வங்கி கணக்கு, பணம் பறிபோன நேரம், தொகை ஆகியவற்றை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். <
News April 1, 2026
திருமாவளவன் பொற்கொடிக்கு வரவேற்பு.. திமுக ஷாக்

திரு.வி.க.நகரில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பொற்கொடிக்கு திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தைரியமாக பொது வாழ்விற்கு வந்திருப்பதை வரவேற்கிறேன்; அவருக்கு அரசியலில் ஒரு இடம் தேவை, அதை அதிமுக அளித்திருப்பதில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார். திருமாவளவனின் இந்த பேச்சு பொற்கொடிக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பது போல் இருப்பதாக பேச்சு எழுந்துள்ளதால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது.


