News November 19, 2025
தீவிரவாத வழக்கில் கைதான டாக்டர் மீது ஜெயிலில் தாக்குதல்

குஜராத்தில் கடந்த 9-ம் தேதி அகமது மொய்தீன் உட்பட 3 டாக்டர்கள், அபாயகரமான ரசாயனத்துடன் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்ததாக கைது செய்யப்பட்டனர். குஜராத் சபர்மதி சென்ட்ரல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அகமது மீது, சக கைதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், தாக்குதலின் காரணம் குறித்து விசாரித்து வருவதாக கூறியுள்ளனர்.
Similar News
News March 29, 2026
‘வயாகரா’.. எப்படி உருவானது தெரியுமா!

சில நேரங்களில் ஒரு நோய்க்காக உருவாக்கப்பட்ட மருந்து, மற்றொரு நோய்க்கு தீர்வாக மாறும். 1990-களில் இதய நோய் சிகிச்சைக்காக ஃபைசர் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட ‘சில்டெனாஃபில்’ மருந்து, பரிசோதனையின்போது பக்க விளைவாக நீண்டநேர விறைப்புத் தன்மையை ஏற்படுத்தியுள்ளது. இது மருத்துவ உலகில் திருப்புமுனையாக அமைந்ததோடு, வயாகரா என்றும் அறியப்படுகிறது. இது தற்செயலான கண்டுபிடிப்பு என்பது ஆச்சரியம் கலந்த உண்மை.
News March 29, 2026
தமிழ்நாடே.. தலைப்புச் செய்திக்கு ready-ஆ?

இன்னும் சற்று நேரத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கையை CM ஸ்டாலின் வெளியிட உள்ளார். அதற்கு ஹைப் ஏத்தும் விதமாக தமிழ்நாடே தலைப்புச் செய்திக்கு ready-ஆ? என தனது X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News March 29, 2026
₹2,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு UPDATE

ஆட்சி மாறினால் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படுமா என மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது. திமுக, அதிமுக என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மகளிருக்கு மாதம் ₹2,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, அதிமுக ஆட்சிக்கு வந்தால் குலவிளக்கு திட்டம் என்ற பெயரில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கான விதிமுறைகள் குறித்து அதிமுக தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. SHARE


