News November 19, 2025
தீவிரவாத வழக்கில் கைதான டாக்டர் மீது ஜெயிலில் தாக்குதல்

குஜராத்தில் கடந்த 9-ம் தேதி அகமது மொய்தீன் உட்பட 3 டாக்டர்கள், அபாயகரமான ரசாயனத்துடன் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்ததாக கைது செய்யப்பட்டனர். குஜராத் சபர்மதி சென்ட்ரல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அகமது மீது, சக கைதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், தாக்குதலின் காரணம் குறித்து விசாரித்து வருவதாக கூறியுள்ளனர்.
Similar News
News April 8, 2026
போர் பீதியால் வளைகுடா நாடுகளில் எச்சரிக்கை!

அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் பீதியால் வளைகுடா நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. அதன்படி குவைத் தனது மக்களை 6 மணி நேரம் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பஹ்ரைன் அரசு, மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு கோரியுள்ளது. கத்தாரில் அச்சுறுத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்தியத் தூதரகமும் வலியுறுத்தியுள்ளது.
News April 8, 2026
சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்

*அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு. *நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்; உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! *சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள். *எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ். *நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது.
News April 8, 2026
டிரம்ப்புக்கு பாக் பிரதமர் வேண்டுகோள்

ஈரானுக்கு டிரம்ப் விதித்த காலக்கெடு இன்னும் சில மணி நேரத்தில் முடிய உள்ளது. இந்நிலையில் பாக்., PM ஷெபாஸ் ஷெரீஃப் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான ராஜதந்திர முயற்சிகள் சீராக நடந்து வருகிறது. எனவே ஈரான் மீதான காலக்கெடுவை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்குமாறு டிரம்பை பணிவுடன் கேட்டுக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.


