News January 8, 2026

தீர்ப்பளித்த நீதிபதிக்கு அச்சுறுத்தல்: கவர்னர் ரவி

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாட்டை கவர்னர் ரவி காட்டமாக விமர்சித்துள்ளார். தீர்ப்பளித்த நீதிபதி அச்சுறுத்தப்பட்டது போன்ற சம்பவம் 75 ஆண்டுகால வரலாற்றில் நடைபெற்றதில்லை என்றும் சாடியுள்ளார். இது அரசியலமைப்பை குலைப்பதற்கான முயற்சி என குறிப்பிட்ட ரவி, HC உத்தரவில் மகிழ்ச்சி இல்லையென்றால் SC செல்லுங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார். உங்கள் கருத்து என்ன?

Similar News

News February 8, 2026

குரூப்-2 தேர்வு ரத்தானது திமுக அரசின் நிர்வாக தோல்வி: EPS

image

TNPSC குரூப்-2 மெயின்ஸ் <<19082017>>தேர்வு ரத்து<<>> செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள EPS, அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ரத்தாவது இதுவே முதல்முறை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘Technical Fault’ என்ற ஒற்றை வரியில் இளைஞர்களின் கனவை சிதைத்துள்ளது திமுக அரசின் நிர்வாகத்தின் பெரும் தோல்வி என கடுமையாக சாடியுள்ளார்.

News February 8, 2026

தமிழ் நடிகர் சுனில் காலமானார்.. கடைசி PHOTO

image

’10 எண்றதுக்குள்ள’, ‘மிராய்’ தமிழ் படங்களில் நடித்த <<19075789>>சுனில் தபா(68)<<>> மாரடைப்பால் காலமானார். நேபாளை சேர்ந்த இவர், அந்நாட்டு மொழிப் படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். குறிப்பாக ‘மேரி கோம்’ படத்தில் இவரது நடிப்பு பெரும் கவனத்தை பெற்றது. காத்மண்டுவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள சுனில் உடலுக்கு பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

News February 8, 2026

திமுக அரசுக்கு இதற்கு கூட துப்பில்லை: அன்புமணி

image

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று நடைபெறவிருந்த <<19082017>>TNPSC Group 2<<>> முதன்மை தேர்வு ரத்தானது. இந்நிலையில், போட்டித் தேர்வை நடத்தக் கூட திமுக அரசுக்கு துப்பு இல்லை என அன்புமணி காட்டமாக விமர்சித்துள்ளார். எனவே, இதற்கு இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்டோரை பலிகடா ஆக்காமல் TNPSC உயர்பொறுப்பில் உள்ளவர்கள் மீது CM ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!