News March 31, 2025
தீரா நோய் தீர்க்கும் குறிச்சி மகாலட்சுமி துர்க்கை கோயில்

புதுக்கோட்டை அடுத்த குறிச்சியில் அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்க்கை அம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள அம்மன் நவபாஷானத்தால் ஆன மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக அரசமரத்தின் கீழே அருள்பாலிக்கும் விநாயகர் இங்கு ருத்திராட்ச மரத்தின் அடியில் உள்ளார். இங்குள்ள அம்மனை வழிபட்டால் முப்பெரும் தேவியரை தனித்தனியே வழிபட்ட பலன் கிடைக்குமாம். மேலும் தீராத நோய்கள் தீரும் என்று கூறுகிறார்கள். இந்த தகவலை பகிரவும்
Similar News
News February 3, 2026
புதுகை: 70% மானியத்தில் பம்புசெட் வேண்டுமா?

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில், 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு உழவன் <
News February 3, 2026
புதுக்கோட்டை: நூதன முறையில் பணம் அபேஸ்!

ஆலங்குடியைச் சேர்ந்த தனசேகரன் (35) என்பவரை கடந்த ஜன.29-ம் தேதி செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர் பிரபல தனியார் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, நகைக்கடன் குறித்து கேட்டு 16 இலக்க எண், OTPயை கேட்டுள்ளார். அதன் பேரில் இவரும் கூறியுள்ளார். பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.4.70 லட்சம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சடைந்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி யிடம் புகார் அளித்துள்ளார்.
News February 3, 2026
புதுக்கோட்டை: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை SHARE பண்ணுங்க.


