News April 15, 2025

தீராத நோய்களை தீர்க்கும் கொங்கு நாட்டு கோயில்!

image

சூலூரில் வைத்தியநாதர் கோயில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இத்தல ஈசன் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். கரிகாலச் சோழன் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்குதற் பொருட்டு, கொங்கு நாட்டில் பல சிவாலயங்களை எழுப்பி திருப்பணி செய்தான். அவற்றுள் இக்கோயிலும் ஒன்று என்கிறது சோழனின் பூர்வ பட்டயம். இங்கு வந்து பூஜை செய்தால் தீராத பிணிகள் கூட தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. SHARE IT!

Similar News

News February 14, 2026

ரேஷன் சிறப்பு குறை தீர்ப்பு முகாம்

image

பொது விநியோக திட்டத்தின் கீழ் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பொதுமக்கள் பெறும் வகையில் மாதந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிப்ரவரி மாதத்திற்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாம் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலக வட்ட வழங்கல் அலுவலகத்தில் இன்று (பிப்.14) நடைபெறுகிறது. பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள கலெக்டர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.

News February 14, 2026

கோவை: உங்களுக்கு ரூ.5,000 வரலையா? CLICK

image

கோவை மக்களே.. அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் நேற்று காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நேற்று (பிப்.13) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும்<> இங்கே கிளிக்<<>> செய்து புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். (SHARE)

News February 14, 2026

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டு நிறைவு

image

1998-ம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி கோவை மாநகரின் 12 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 56பேர் உயிரிழந்த நிலையில், 200-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு அல்உம்மா அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. இவ்வழக்கில் 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் இன்றோடு நிறைவடைந்தது.

error: Content is protected !!