News December 11, 2025
தீயில் உடல் கருகும் போது தாய்லாந்துக்கு டிக்கெட்

<<18509384>>கோவா இரவு விடுதியில்<<>> 25 பேர் உடல் கருகி பலியாகிக் கொண்டிருந்த சமயத்தில், விடுதி உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு விமான டிக்கெட் புக் செய்தது தெரியவந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடிய நள்ளிரவு 1:17 மணிக்கு டிக்கெட் புக் செய்து, அதிகாலை 5:30 மணிக்கு தாய்லாந்து தப்பி ஓடியுள்ளனர். அதேபோல், அவர்கள் பயன்படுத்தும் சிம் கார்டுகளும் வீட்டு வேலைக்காரருடையது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 11, 2025
PM மோடி, அமித்ஷா, ராகுல் கூட்டாக ஆலோசனை

தலைமை தகவல் ஆணையர், லஞ்ச ஒழிப்புத்துறை தலைவரை பிரதமர், மத்திய அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய குழு தேர்ந்தெடுப்பது வழக்கம். அந்தவகையில், இது தொடர்பாக PM மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளனர். சுமார் 88 நிமிடங்கள் நீடித்த இந்த ஆலோசனையில், சிலரது பெயர்கள் நியமனம் செய்யப்பட்டதாகவும், அதற்கு ராகுல் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News December 11, 2025
டிசம்பர் 11: வரலாற்றில் இன்று

*சர்வதேச மலை நாள். *1882 –கவிஞர் சுப்பிரமணிய பாரதி பிறந்தநாள். *1931 – ஆன்மிகவாதி ஓஷோ பிறந்தநாள். *1935 – 13வது இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறந்தநாள். *1958 – நடிகர் ரகுவரன் பிறந்தநாள். *1969 – செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பிறந்தநாள். *1972 – அப்பல்லோ 17 நிலாவில் தரையிறங்கியது. *1980 – நடிகர் ஆர்யா பிறந்தநாள். *2004 – பாடகி M.S. சுப்புலட்சுமி உயிரிழந்தநாள்.
News December 11, 2025
விரைவில் வருகிறது ஹைட்ரஜன் ரயில்

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லோக்சபாவில் பதிலளித்த அவர், இது முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. 10 பெட்டிகள் கொண்ட உலகின் மிக நீளமான ஹைட்ரஜன் ரயிலாக இது இருக்கும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றத்தை இது முற்றிலும் தவிர்க்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


