News January 31, 2025

தீயணைப்பாளர் எழுத்து தேர்வு ‘ஹால்டிக்கெட்’ வெளியீடு

image

புதுச்சேரி நிர்வாக சீர்த்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி தீயணைப்பு துறையில் தீயணைப்பாளர் மற்றும் தீயணைப்பு வாகன ஓட்டுநர் நிலை – 3 பணியிடத்திற்கான தேர்வு வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான ஹால்டிக்கெட்டினை htpps://recuitment.py.gov.in என்ற இணையதளத்தில் இன்று (ஜன.31) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

Similar News

News March 2, 2025

புதுவைக்கு மழை எச்சரிக்கை

image

பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News March 1, 2025

புதுவையில் விபத்து காப்பீடு சிறப்பு முகாம்!

image

புதுவை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கமால்பாஷா நேற்று (பிப்.28) வெளியிட்ட செய்தியில், இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சார்பில், கடந்த 24ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை, சிறப்பு விபத்து காப்பீட்டு பதிவு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது. பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில், காப்பீடு திட்ட சிறப்பு முகாமை கால நீட்டிப்பு செய்யமாறு கேட்டுக்கொண்டனர். இதனால், மார்ச் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

News March 1, 2025

புதுவை ஆளுநர் கைலாஷ்நாதன் எச்சரிக்கை

image

புதுவை மாநில ஆளுநர் கைலாஷ்நாதன் வெளியிட்ட உத்தரவை, அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார். அதில், “அரசுத்துறைகளில் முறைகேடான பணிநியமனங்களுக்கு அதிகாரிகள் துணை போகக்கூடாது. உச்சநீதிமன்ற உத்தரவினை பின்பற்றப்பட வேண்டும்” என்று ஆளுநர் கைலாஷ்நாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!