News March 20, 2025

தீப்பொறி கிளம்பியதால் மெட்ரோ சோதனை ஓட்டம் ரத்து

image

சென்னை போரூர் – பூந்தமல்லி இடையே 2.5 கி.மீ தூரத்திற்கு ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஓடுதளத்தில் வயர் அறுந்து விழுந்து தீப்பொறி கிளம்பியதால் சோதனை ஓட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இவ்வாறு நடைபெறுவது வழக்கம் எனவும், தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News March 21, 2025

வரத்தை வாரி வழங்கும் காளிகாம்பாள்

image

சென்னை ஜார்ஜ் டவுனில் பிரசித்தி பெற்ற காளிகாம்பாள் கோவில் உள்ளது. காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு பஞ்ச பூத ஸ்தலங்களுக்கு உண்டான சம புனிதத்தன்மை இக்கோயிலுக்கும் உண்டு. மேலும், இந்த குழந்தை வரம், திருமண வரம் போன்ற வேண்டிய வரத்தை அள்ளிக்கொடுக்கும் அம்மனாக உள்ளார். உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கவும் பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகிறாரகள். ஷேர் பண்ணுங்க.

News March 21, 2025

சென்னையில் இந்த உணவுகளை மிஸ் பண்ணாதீங்க!

image

1.பர்மா உணவுகள், வடா பாவ் (பாரிஸ் கார்னர்), 2. கெபாப், இப்தார் உணவுகள் (மண்ணடி), 3. பீப் கடாய் ரோஸ்ட் (தாஷ மக்கான் தெரு), 4. பன் பட்டர் ஜாம் (மவுண்ட் ரோடு), 5.சாட், சமோசா, ஜிலேபி (சௌகார்பேட்டை), 6.மீன் வருவல்கள், மரீனா பீச் (லூப் சாலை), 7.சாண்ட்விச், பிரட் ஓம்லெட்- ரெட் கிராஸ் ரோடு, எழும்பூர். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 21, 2025

சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

image

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை(22-03-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க. 

error: Content is protected !!