News October 29, 2024
தீபாவளி விமான கட்டணம் அதிரடி உயர்வு

தீபாவளி பண்டிகை ஒட்டி நான்கு நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் ரயில் மற்றும் பேருந்துகளில் ஏற்கனவே முன்பதிவுகள் முடிந்து விட்டன. இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானத்திற்கான கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது. சாதாரண நாட்களில் சென்னைக்கு 4,010 ரூபாய் கட்டணம் இருந்த நிலையில் தற்போது 8,976 முதல் 13,317 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.
Similar News
News September 12, 2025
தூத்துக்குடியில் குற்றாவளி ஆஜராக நீதிமன்றம் கெடு

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆபிரகாம் என்பவர் மீது ஒரு வழக்கு விசாரணை உள்ளது. இந்த விசாரணைக்கு அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் தூத்துக்குடி நீதிமன்றம் வரும் 15ம் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை என்றால் அவர் தலைமறைவு குற்றவாளி என தீர்ப்பு விதிக்கப்படும் என நீதிபதி தாண்டவன் எச்சரிக்கை விதித்து உத்தரவிட்டு உள்ளார்.
News September 12, 2025
தூத்துக்குடி மீனவருக்கு ஜாமின்

தூத்துக்குடியை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது கடந்த 2018ம் ஆண்டு அவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து அவர் வழக்கிற்கு ஆஜராகவில்லை என நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து அவரை கைது செய்தது. நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான சுரேஷை வாரம் ஒரு முறை கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது.
News September 12, 2025
தூத்துக்குடி: 50% மானியத்தில் கிரைண்டர்!

தூத்துக்குடி மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா?? அப்போ தமிழக அரசு 5000 மானியம் புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்க வயது 25க்கு மேல் இருக்க APPLY பண்ணலாம். வேண்டும். தென்காசி மாவட்ட சமூக நல அலுவரிடம் உங்கள் ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பியுங்க.. பெண்களுக்கு SHARE பண்ணி APPLY பண்ணுங்க.